கேளிக்கை

தூக்கியெறியப்பட்ட நயன்

(UTV | இந்தியா) – தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஜினிக்கு அடுத்த நாயகனாக கலக்கி வந்தார் பிரசாந்த். தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் இருக்கும் இடத்தில் உண்மையில் இருக்க வேண்டியவர் பிரசாந்த் தான்.

ஆனால் தன்னுடைய கதை தேர்வில் சொதப்பி பல தோல்வி படங்களை கொடுத்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இடையில் வெற்றிப்படம் கொடுக்க பல முயற்சிகள் செய்தும் எதுவுமே கைகொடுக்காத நிலையில் சிறிது நாட்கள் நடிப்புக்கு பிரேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முதலில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்க பேசப்பட்டவர் நயன்தாரா தானாம். ஆனால் சம்பள விஷயத்தில் மிகவும் கெடுபிடியாக இருக்கும் நயன்தாரா இந்த படத்திற்கு 6.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

மொத்த படத்தையும் அந்த பட்ஜெட்டில் முடிக்க திட்டம் போட்டுள்ள பிரசாந்த் நயன்தாராவை தூக்கி வீசிவிட்டு மற்றொரு முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

படக்குழுவினரை இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்துவிட்டு அடுத்த மாத துவக்கத்தில் படப்பிடிப்புக்கு சென்று விட வேண்டும் என இயக்குனருக்கு கட்டளை போட்டு விட்டாராம்.

Related posts

கர்ப்பமானதாக வெளியான தகவல் – இலியானா

இலங்கை இளைஞர்களின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா பாராட்டு(video)

அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பு!!