உலகம்

நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

(UTV | இந்தியா)- இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோபூர்வ டுவிட்டர் கணக்கு, மற்றும் உத்தியோபூர்வ இணையத்தள பக்கத்திற்கு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கை முடக்கியுள்ள ஹேக்கர்கள், பிரதமரின் கொரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர் நிறுவனம், வெரிஃபைடு பக்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கை 25 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Related posts

“பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது”

227 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் – நடந்தது என்ன

editor

அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்