உலகம்

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தொடர்ந்தும் சோனியா காந்தி

(UTV|இந்தியா) – இந்திய தேசிய காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்ததை தொடர்ந்து, சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர வெளிப்படையான தலைமைத்துவம் அவசியமென வலியுறுத்தி, 20 இற்கும் அதிகமான சிரேஷ்ட உறுப்பினர்கள் ​கடிதம் அனுப்பியதை அடுத்தே, அவர் இந்த பதவி விலகல் அறிவிப்பை வௌியிட்டிருந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்வு செய்யும் என்றும் அதுவரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

பாரியளவில் உயர்ந்த தங்கத்தின் விலை

editor

‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா வழக்கு!

ஈரான்- பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமெரிக்கா