உள்நாடு

உதயங்க இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(24) முன்னிலையாகுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்று சட்டவிதிமுறைகளை மீறி நாட்டிற்கு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்து சுங்க திணைக்களம் தமக்கு எதிராக தவறான சாட்சியங்களை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக உதயங்க வீரதுங்க ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு உதயங்க வீரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் இரத்து

editor

இந்திய படகுகள் யாழில் ஏலம்

திருமண மண்டபம் மற்றும் கேட்டரிங் விலை அதிகரிப்பு!