உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2,789 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,789 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 118 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2,918 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’

உத்தேச வரவுசெலவுத்திட்ட யோசனைக்கு – அரச ஓய்வூதியர்களின் தேசிய இயக்கம் இணக்கம்.

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்