உள்நாடு

இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை

(UTV|கொழும்பு) – இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்க‍ை எதுவும் விடுக்கப்படவில்லை.

No description available.

No description available.

Related posts

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு – நாமல் எம்.பி

editor

“இந்தியா – இலங்கை ஒத்துழைப்புக்கு வானமே எல்லை”

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்