உள்நாடு

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | நீர்கொழும்பு ) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, அவர்களை இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor