உலகம்

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி உட்பட 10 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிக பயணிகள் ஏற்றிச் சென்றமை மற்றும் பலத்த காற்று காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் மீட்புப்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலகளவில் கொவிட் – 19 இனது ஆதிக்கம்

இங்கிலாந்தில் வைரலாகும் ‘டெல்டா’

குற்றவியல் பிரேரணையில் ட்ரம்ப் வெற்றி