வகைப்படுத்தப்படாத

எல் போபோ எரிமலை – அரசு எச்சரிக்கை

(UTV | மெக்ஸிகோ) – மெக்ஸிகோவில் உள்ள எல் போபோ எரிமலை சாம்பலையும், புகையையும் அதிக அளவில் வெளியேற்றி வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை 36 முறைக்கும் அதிகமாக சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவின் அடையாளமாகக் கருதப்படும் இந்த எரிமலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெடிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து 968 அடி உயரத்திற்கு சாம்பலையும், புகையையும் எல் போபோ எரிமலை வெளியேற்றி வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்ஸிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மக்கள் மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ජූනි මාසයේ උද්ධමනය 3.8% කින් පහතට

Premier opens ‘Enterprise Sri Lanka’ exhibition in Anuradhapura today

ගිනිගත්හේන නාය යයි.අයෙකු අතුරුදන්(ඡායාරූප)