கேளிக்கை

நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்

(UTV|இந்தியா) – தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார். சுதந்திர தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

Related posts

ஆர்யாவுக்கு உதவ களத்தில் இறங்கிய சாந்தனு, கீர்த்தி

எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா உறுதி

ஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு