உலகம்

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

(UTV|அமேரிக்கா) – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய சகோதரரான ரொபட் டிரம்ப் இன்று காலமானார்

72 வயதுடைய ரொபட் டிரம்ப் உடலநலக்குறைவு காரணமாக அவதியுற்றுவந்த ராபர்ட் டிரம்ப் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளைய சகோதரர் ரொபட் மறைவுக்கு அதிபர் டிரம்ப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஃப்ரெட் டிரம்ப், ரொபட் டிரம்ப் என 2 சகோதரர்களும், மரியானா டிரம்ப் பெர்ரி, எலிசபெத் டிரம்ப் க்ரவ் என 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் ராபர்ட் டிரம்ப் டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ஆவார்.

Related posts

கென்யாவின் 5வது ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள்

editor