உள்நாடு

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

(UTVகொழும்பு)- அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளை(17) முதல் திறக்கப்படவுள்ளன.

இதன்படி, நாளை முதல் அனைத்து பீடங்களினதும் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பின்பற்றப்பட வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகைள எடுப்பதற்கு துணை வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

iஇதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய மாணவர்கள் வழமை போன்று விடுதியில் தங்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதியின் அறையில் தங்கும் மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தை சேர்ந்த மாணவர் குழுவாக இருக்கவேண்டும் எனவும் ஏனைய ஆண்டு மாணவர்கள் இருக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் விடுதிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது குறித்து இன்று தீர்மானம்

உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது

editor

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

editor