உள்நாடு

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு இளம் உறுப்பினருக்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒரு இளம் உறுப்பினருக்கு பெற்றுக்கொடுக்க கட்சியின் மத்திய செயற்குழு கூட்டதத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாராளுமன்ற தோல்வியின் பின்னர் கட்சியை மறுசீரமைத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் வெற்றிகரமான பயணத்தை கருத்தில் கொண்டு, ஒரு இளம் உறுப்பினர் ஒருவரிடம் கட்சியை ஒப்படைக்க ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று SJB இனது அமைதிப் போராட்டம்

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட சலுகை!

வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது