விளையாட்டு

கொவிட் 19 – டோனியின் பரிசோதனை முடிவு வெளியாகியது

(UTV | இந்தியா) – ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் – 2020 தொடருக்கான வீரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், இதில் டோனியின் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனிக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்தாண்டு கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொடர் இந்திய அரசும் அனுமதியுடன் எதிர்வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு அணியின் வீரர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் தொடர்பில் மஹேலவின் கருத்து

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் தடுப்பூசி

800 ஐத் தொடர்ந்து முரளிக்கு தலைமையிலும் சிக்கல்