உள்நாடு

தேசியப்பட்டியல் பெயர்விபரங்கள் – கால எல்லை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெயரிடும் கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில், தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி,ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபது பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு [UPDATE]

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு – உயர் நீதிமன்றின் உத்தரவு!

editor

புதிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமில்லை – அருட்தந்தை சிறில்காமினி.