உள்நாடு

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

(UTV|குருநாகல் ) – குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள இடமளிக்குமாறு பாராளுமன்றம் அறிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!