உள்நாடு

தேசிய பட்டியல் விவகாரம் – இன்று கலந்துரையாடல் 

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

editor

இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!