உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(10) கொரோனா தொற்றுக்குள்ளான 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய நால்வரும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 23 பேரும் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2,593 பேர் குணமடைந்துள்ளதுடன், 267 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அறிவுறுத்தல்

துசிதவின் கைத்தொலைபேசியைக் CID யிடம் ஒப்படைக்க உத்தரவு!

editor