உள்நாடு

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 680 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் 171,169 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,844 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இதுவரை 29,729 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதுடன், முப்படையினரால் நிர்வாகிக்கப்படும் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3,025 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்ட வருகின்றனர்.

Related posts

பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor