உள்நாடு

மஹிந்தவுக்கு மோடியிடம் இருந்து வாழ்த்து

(UTV | கொழும்பு) – இதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை மக்களின் வலுவான ஆதரவோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு!

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் – ஜனாதிபதி அநுர அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் ? சரத் பொன்சேகா கேள்வி

editor