உள்நாடு

இராஜாங்கனை தபால் மூல வாக்களிப்பு இன்று

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த தபால் மூல வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

420 அரச அதிகாரிகள் இன்று தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி R.M. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

விமான பணிப்பெண்களுக்கான அறிவிப்பு

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

அரசியல் பழிவாங்கலிற்குள்ளானவர்கள் தொடர்பில் ஆராய, மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு