உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​சென்னையில் இருந்து வந்த நால்வருக்கும் பெல்ரூஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை 2,103 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, தற்போதைய நிலையில் 656 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில்

எல்ல பேருந்து விபத்து – தயார் நிலையில் இரண்டு ஹெலிகொப்டர்கள்

editor