வகைப்படுத்தப்படாத

சாரங்கவின் சகாக்களுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முன்னெடுக்கும் குழுவினருடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முன்னெடுக்கும் குழுவின் தலைவரான சாரங்க எனும் நபருடன் நெருங்கிய தொடர்புடைய இருவர் மோதரை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதரை பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிரியாவின் யுத்த நிறுத்தத்திற்கு இதுவரையிலும் இணக்கம் காணப்படவில்லை

“எமது பாரிய ஆடை தொழில்துறையில் மூன்றில் இரண்டு பங்கு பெண் தொழிலாளர் பலத்தைக் கொண்டுள்ளது”

Cambridge Analytica நிறுவனம் மூடப்படவுள்ளது