உள்நாடுவணிகம்

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

(UTV|கொழும்பு) – ETI நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் குறித்த இரு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு 06 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள விதம்

நாட்டில் இருடங்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இரங்கல் நிகழ்வு