உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

(UTV| கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான நான்காம் நாள் இன்று(16) இடம்பெறுகின்றது.

பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் தமது தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பிலான சுகாதார நிபந்தனைகள்

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

இன்று முதல் மீண்டும் அவசர சட்டம் அமுல்