உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2646 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2646 ஆக அதிகரித்துள்ளது

நேற்றைய தினம்(13) 29 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனபுர தனிமைப்படுத்தல் நிலையத்தின் 11 பேர் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 14 பேருக்கும் கொரோனா வைரஸ் தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இருவர் மாலைதீவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன் இராஜாங்கனையை சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை 1,981 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் 498 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

வாகன பேரணியில் பங்கேற்க தயாராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 33 பேர் கைது

editor

ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை