உள்நாடு

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – 05 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – கொழும்பு-காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையரான தனது காதலன் மற்றும் நண்பருடன் காலி முகத்திடலில் இருந்தபோது, இளைஞசர்கள் குழுவொன்று அவர்களுக்கு இடையூறு விளைவித்திருந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

இந்திய கடற்படைக்கு சொந்தமான “Dornier 228” இலங்கைக்கு

மீண்டும் மாற்றத்தை மாற்ற விரும்புகிறார்கள் – பிரதேச சபைத் தேர்தலில் போட்டி – சமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு

editor