உள்நாடு

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற போலித் தகவல்கள் மற்றும் பிரசாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி பதில் கூறிய பிரதமர் ஹரினி | வீடியோ

editor

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசின் நடவடிக்கை என்ன ? சாணக்கியன் கேள்வி

editor