உள்நாடு

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்

(UTV|சிலாபம்)- சிலாபம், மாரவில பிரதேசத்தில் 10 வீடுகளை சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு குறித்த குடும்பங்கள் சுயதனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

 பழைய நிலைமைக்கு திரும்ப இருக்கும் எரிபொருள் ஒதுக்கீடு

‘இன்னும் 10 நாட்களுக்குள் எரிபொருள்-எரிவாயுவுக்கு தீர்வாம்’

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது