உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடநேரம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற முடியும் எனவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு தேவையான சுகாதார வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, விளையாட்டு மற்றும் கூட்டான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுப்படுத்த வேண்டாமெனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

பெறுமதி வாய்ந்த போதை மாத்திரைகள் மீட்பு

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி

editor

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை