உள்நாடுசூடான செய்திகள் 1

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

(UTV | கொழும்பு ) – உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு அதிக விலைகளுக்கு விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று(03) விவசாயிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் தானியங்கள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோளம்,பயறு,கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள களஞ்சிய வசதிகள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

Related posts

சட்டப்படி வேலை : அலுவலக ரயில் சேவைகளில் தாமதம்

ஹம்தியின் ஜனாஸா இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை! நடப்பது என்ன?

பிரதமரின் புது வருட வாழ்த்துச் செய்தி