உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 389 பேர் கைது

(UTV | கொழும்பு ) – கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் தொடர்பில் மேல் மாகாணத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும ஐஸ் போன்ற போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் கொம்பனித்தெரு, கிரேன்பாஸ், களனி, முல்லேரியா மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரிதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்தியர். உமர் மௌலானா காலமானார்!

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.