உள்நாடுவிளையாட்டு

உலகக் கிண்ண ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

(UTV | கொழும்பு) – 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணயம் தொடர்பாக கூறப்படும் விசாரணையில் வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை என ஆட்ட நிர்ணய மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துக்களுடன் இருவர் கைது

editor

மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம் – மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor

போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விசேட வர்த்தமானி