உலகம்

டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட ஈரான்

(UTV|ஈரான்) – ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஈரான் பிடியாணை பிறப்பித்துள்ளது

மேலும் இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற இராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்.

சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் மற்றும் 35 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இரான் விசாரணை அதிகாரி அலி அல்காசிமெஹர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இண்டெர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஈரான் அரசின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related posts

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்

பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் அவசியம்

உடனடியாக பதவி விலகுவதாக இந்திய உப ஜனாதிபதி திடீர் அறிவிப்பு

editor