உள்நாடுசூடான செய்திகள் 1

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று(29) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதன் முதற்கட்டமாக, அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு மாத்திரமே இன்று பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், குறித்த சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

உதயமாகியது இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்!

editor

ரயில் கழிவறையில் மீட்கப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.