உள்நாடு

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

(UTV|கொழும்பு)- முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களை நாளை(28) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள்ளது

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

நெல்லிற்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை [VIDEO]

வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள்