உள்நாடு

பரிசு பொருட்கள் வழங்க முடியாது; திரும்பி சென்ற முன்னாள் ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – பொலனறுவை பௌத்த மையத்திற்கு இன்று (15) வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வில் வைத்து இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகைத்தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவிக்கையில், “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே தேர்தல் சட்டத்தை மதிக்கின்றேன். எனவே பொதுத்தேர்தல் நிறைவடைந்தது குறித்த சான்றிதல்களை வழங்கி வைப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

ஊழலற்ற ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசு பூரண ஆதரவை வழங்கும்

editor

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor