உள்நாடு

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 7.30 மணி அளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்.

பின்னர்,வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

மாஸ்க் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

editor