உள்நாடு

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- – அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை பல்கலைகழக வளாகத்திற்குள் ஒன்று கூடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மலேசிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

editor

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

ஆளுங்கட்சியினர் பிரதமரை சந்திக்கின்றனர்