உள்நாடு

அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அலுவலக ரயில்கள் 49 வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் அதிகரித்திருந்தபோது, நாடளாவிய ரீதியில் ரயில் சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்களின் இயல்பு வழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து ரயில் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வழமையான நேர அட்டவணையில் அனைத்து பகுதிகளுக்குமான ரயில் சேவைகள் திங்கட் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத்துடன் உரிய நேரத்தில் இரவு நேர தபால் ரயில் சேவைகளும் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், சுகாதார தரப்பினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

லலித் – குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு

editor

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor

SJB உடன் இணைந்து செயல்பட UNP இணக்கம்

editor