உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(03) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் 31 பேர் கடற்படையினர் என்பதோடு ஏனைய 35 பேரும் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 19 பேர் கட்டாரிலிருந்தும், இரண்டு பேர் குவைட்டிலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

கொரோனா : மேலும் 07 பேர் உயிரிழப்பு

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது