உள்நாடு

நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை – விஜித ஹேரத்

(UTV | கொழும்பு) – நாடு இன்னும் முழுமையாக சாதாரண நிலைக்கு திரும்பவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.

நாளை(04) மற்றும் நாளை மறுதினம் (05 ) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

நாடு சாதாரண நிலைக்கு வந்திருந்தால் இவ்வாறான ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படும் தேவை இல்லை என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பி இருந்தார்.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது

Julie Chung இடமிருந்து ஒரு அருமையான ட்வீட்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்