உள்நாடு

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

(UTV|கொழும்பு)- கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியிலுள்ள கட்டடத் தொகுதியொன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது

சம்பவம் தொடர்பில் கடந்த 31 ஆம் திகதி ஏற்கனவே ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார் .

இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Related posts

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

பொது மன்னிப்பின் கீழ் 444 கைதிகள் விடுதலை

சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு