உள்நாடு

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை

(UTV – கொழும்பு) – பாடசாலைகளது மீள் ஆரம்பம் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகளை மாற்றியமைக்க கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். எம் சித்ரானந்தா தெரிவித்தார்.

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, சுகாதார நிலமைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது, க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார் .

Related posts

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

இலஞ்ச வழக்கில் இருந்து குமார வெல்கம விடுவிப்பு

குறைந்த அழுத்தம் தொடர்கிறது