உள்நாடு

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

(UTV | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முயற்சியின் மூலம் தரவுகள் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி தெரிவித்தள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலங்களில் இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவினால் செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொருளாதார நெருக்கடி -நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்குவதில் சிக்கல்

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ