உள்நாடு

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

(UTV | கொழும்பு) -யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யானை தாக்கி முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் – அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவித்தல்

குரங்குகளைப் பிடித்து தீவு ஒன்றில் விடுவதற்கு தீர்மானம்

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

editor