உலகம்சூடான செய்திகள் 1

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.

பல்வேறு மாகாணங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவம் தயார் நிலையில் உள்ளது.

இதையடுத்து, பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் திகதி ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்.

அப்போது குறித்த பொலிஸ் அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார். இதில் ஜோர்ஜ் பிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொலிஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

திடீர் உடல்நலக்குறைவு – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

editor

ஐந்தாம் தர புலமைபரீட்சையில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்…

புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்ப்பில்…