உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதற்கு அதில் சட்டரீதியான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வந்த நிலையில், இன்றும் ஆராய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ள சட்ட மா அதிபர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Related posts

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை : பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor