உள்நாடு

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்

(UTV | கொழும்பு) – அம்பன் சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பன் என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 நு இற்கும் இடையில் வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து நேற்று (மே 20ஆம் திகதி) பிற்பகலளவில் வங்காளதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்பட்டது.

தென்,மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

மீண்டும் இலங்கையில் பதிவான நிலநடுக்கம்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியானது

editor

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor