உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வெற்றி தின நிகழ்வு இன்று

(UTV|கொழும்பு)- தேசிய போர் வெற்றி தின நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் இன்று(19) இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாட்டின் யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் 11 ஆவது தேசிய போர் வெற்றி தினம் இடம்பெறவுள்ளது

இந்த நிகழ்வில் நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் நினைவு கூரப்படவுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்திற்கு இலங்கையர்

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி